உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Income Tax Department Income Tax Return
By Fathima Nov 25, 2025 05:21 AM GMT
Fathima

Fathima

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சமாக  பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வருமான இலக்கு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Announcement New Tax Payers 

இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கான 2 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டி வருமானம் ஈட்ட முடிந்தது.

இந்த நேரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என குறிப்பிட்டார்.

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எட்டு உடல்கள் மீட்பு! காசாவில் தொடரும் சோகம்

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எட்டு உடல்கள் மீட்பு! காசாவில் தொடரும் சோகம்