மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

CEB Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Feb 11, 2025 04:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் மின்வெட்டு எந்த முறையில் நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில், இலங்கை மின்சார சபை புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் எவ்வாறு மின்தடை இடம்பெறும் என்பது குறித்து அறிந்து கொள்ள புதிய முறைமையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள சிக்கல்

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள சிக்கல்

இடம்பெறும் முறை குறித்து அறிய..

மேலும், மின்சார சபையின் தொலைபேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Issued By The Ceb

இதேவேளை, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மின்வெட்டு தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு, இன்று(11.02.2025) ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

மின்தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மின்தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மின்வெட்டு நடைமுறை..

இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Issued By The Ceb

மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

டொலர் பெறுமதியில் மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

டொலர் பெறுமதியில் மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW