மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Sri Lanka Food Crisis Sri Lankan Schools Education
By Fathima Sep 25, 2023 08:04 AM GMT
Fathima

Fathima

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை

அத்துடன், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கு அவசியமான பாடப்புத்தகங்களில் 50 வீதமானவை அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு | Announcement From Government For School Student

தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் பாடப்புத்தகங்களை அச்சிடும் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.