கேக் பிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு

Food Shortages Festival Egg
By Sumithiran Nov 06, 2024 06:25 AM GMT
Sumithiran

Sumithiran

வரும் பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

கோதுமை மா பட்டர் விலை

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 190 முதல் 195 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், பட்டர், முட்டை போன்றவையும் அதிக விலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கேக் பிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு | Announcement For Cake Lovers

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை 1000 முதல் 1200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை 

வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கேக் விலையும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.