இலங்கையில் நீ்ர் விநியோகத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

Sri Lanka Sri Lankan Peoples Water Cut Water Board Water
By Rakshana MA Feb 18, 2025 02:46 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலையை கருத்திற்கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் மன ஆரோக்கியமும் எதிர்காலமும்! பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்

குழந்தைகள் மன ஆரோக்கியமும் எதிர்காலமும்! பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்

நீரின் பயன்பாடு

அந்த அறிக்கையில், இந்த நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக உள்ளது. 

இலங்கையில் நீ்ர் விநியோகத்தில் ஏற்படவுள்ள சிக்கல் | Announcement About Water Cut In Sri Lanka

குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

பொதுமக்களுக்கான கோரிக்கை 

எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நீ்ர் விநியோகத்தில் ஏற்படவுள்ள சிக்கல் | Announcement About Water Cut In Sri Lanka

இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்றும், இந்த நேரத்தில் பாதுகாப்பான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வாரியம் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் ஏற்பட்ட மின் தடை! காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

நாட்டில் ஏற்பட்ட மின் தடை! காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW