சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Driving Licence Department of Motor Vehicles
By Shehan Nov 17, 2025 06:29 AM GMT
Shehan

Shehan

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சிடும் அட்டைகள் இல்லாததால், ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியை உலுக்கிய பேருந்து விபத்து

சவுதியை உலுக்கிய பேருந்து விபத்து

 

ஓட்டுநர் உரிமம் 

அதற்கமைய, தினமும் சுமார் 6,000 ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement About Srilanka Licence

இதேவேளை கடந்த காலங்களில் கிட்டத்தட்ட 350,000 ஓட்டுநர் உரிமங்கள் அச்சிடப்படாமல் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குவிந்து கிடக்கும் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்து 14 நாட்களுக்குள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அல்லாஹ் விசாரிக்கும் மனிதர்கள்

அல்லாஹ் விசாரிக்கும் மனிதர்கள்