சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
விசேட கலந்துரையாடல்
மேலும் தெரியவகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அங்கவீனமுற்றோர்களுக்கான நாடாளுமன்ற மன்றத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.