எல் நினோ நிலைமைகளால் பாதிக்கப்பட்ட யாலா விலங்குகள்

Sri Lanka
By Pavi Aug 28, 2026 07:23 AM GMT

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமையால் யால தேசிய பூங்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மழையின்மை மட்டுமன்றி, பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வனவிலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை மேலும் மோசமடைந்தால், செப்டம்பர் 14 முதல் ஒக்டோபர் 15 வரை யால தேசிய பூங்காவின் முதலாம் வலயம் (Block 01) தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாலா விலங்குகள்

எனினும் யாலா தொகுதி 01 மட்டும் மூடப்பட்டிருக்கும், அதே சமயம் யாலா தொகுதிகள் 2 மற்றும் 3 பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.

எல் நினோ நிலைமைகளால் பாதிக்கப்பட்ட யாலா விலங்குகள் | Animals In Yala Affected By El Ni O Conditions

இக்காலப்பகுதியில் போதுமான மழை பெய்து வெப்பநிலை குறைந்தால், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே பூங்காவை மீண்டும் திறக்க முடியும் .

மேலும், அதிக மழை பெய்தால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி உடைந்து செல்லும் அபாயம் உள்ளதுடன், பூங்காவிலுள்ள வீதிகளைப் பாதுகாப்பதும் பூங்காவை தற்காலிகமாக மூடுவதற்கான மற்றொரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


GalleryGalleryGallery