குடு அஞ்சு தொடர்பில் பிரான்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Sri Lanka France
By Fathima Oct 27, 2023 06:40 PM GMT
Fathima

Fathima

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தேடப்பட்டு வந்தார்.

போதைப்பொருள் கடத்தல் 

இந்தநிலையில் நாட்டில் இருந்து தப்பிச்சென்ற குடு அஞ்சு, கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

குடு அஞ்சு தொடர்பில் பிரான்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | An Underworld Figure Kudu Anju

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் குழுவை நடத்தி வந்த குடு அஞ்சுவை கைது செய்ய சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், குடு அஞ்சுவின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நான்கு பேரை கல்கிசை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்......! நேரடியாக களத்தில் இறங்கும் ரஷ்யா

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்......! நேரடியாக களத்தில் இறங்கும் ரஷ்யா

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்