அக்கரைப்பற்றில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய இரும்பு விற்பனை கடை
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதியிலுள்ள பழைய இரும்புகள் விற்பனை மற்றும் பழைய நானாவித பொருட்களின் பாரிய களஞ்சிய சாலையொன்று இன்று(06.06.2023) தீப்பற்றி எரிந்துள்ளது.
அக்கரைபற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஆலயடிவேம்பு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைகளின் நீர் பவுசர்களின் உதவியைக்கொண்டு பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
தீ வெளிவருவதை அவதானித்த அருகில் இருந்தவர்களும் கடையிலே வேலை பார்த்தவர்களும் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நீண்டகாலமாக இயங்கிவரும் இந்த களஞ்சியசாலையில் பழைய பாவனைக்குதவாத இரும்பு மற்றும் நானாவித இரும்பு வகைகள் மின்சார உபகரணங்கள் கொள்வனவு செய்து மீள்சுழர்ச்சி பாவனைக்காக வேறு இடங்களுக்கும் அனுப்பி வந்துள்ளனர்.
இருப்பினும் இச்செயற்பாடு பாதுகாப்பற்ற முறையில் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பிரதேச சபை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.