மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

Ampara Sri Lanka Sri Lankan Peoples
By Madheeha_Naz Oct 02, 2023 11:30 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அம்பாறை -  கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மாம்பழ உற்பத்தியில் சுமார் 100க்கும் அதிகமாக மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நேற்று(02.09.2023) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர் | An Accomplished Female Mango Production

மாம்பழ உற்பத்தி

மேலும் மாம்பழ உற்பத்தியில் அதிபர் உட்பட மாணவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம், சம்பந்தப்பட்டதுடன் மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருப்பதாகவும் எதிர்காலத்தில் இச்சிறுவர்களின் திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர் | An Accomplished Female Mango Production

அத்துடன் குறித்த மாம்பழ அறுவடைக்கு முன்னர் மாம்பழ உற்பத்திக்கான பங்களிப்பினை யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் சசிகரன் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ஊடாக ஒரு தொகுதி பொதி செய்கின்ற பைகளை வழங்கி ஊக்கப்படுத்தி ஆலோசனை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் சேர் கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் (நிர்வாகம் ) மற்றும் ஏனைய அதிதிகளாக முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.கமால் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனப் உறுப்பினர்களான ரீ.எம்.இர்பான் ஜே.எம்.ஜெஸீல் ஐ.எம்.சமீறுல் இலாஹி பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத் எம்.எம் முஹ்ஷீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான் அமீர் ஏ பாறூக் இமுன்னாள் நாவதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம். பி. அப்துல் றஹீம் பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery