அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாளை (01.06.2023) குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகையினை பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜம்மியத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினூடாக இதனை வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்தை சென்றடைவதற்கு ஏதுவாக நாளை வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கவும்.

தொழுகை நிறைவு
அத்துடன், ஜூம்ஆத் தொழுகையை பிற்பகல் 12.45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜூம்ஆப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் உலமாக்களை, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |