அம்பாறை - பெரியநீலாவணை பொது மக்களுக்கு பொலிஸாரின் அறிவித்தல்

Ampara Sri Lanka Police Investigation Crime
By Fathima Aug 11, 2023 08:39 AM GMT
Fathima

Fathima

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக  நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை உட்பட இதர பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலர் வீணாக குழப்பங்களை ஏற்படுத்தி இவ்வாறான திருட்டு சம்பவத்தில் குழுக்களாகவும், தனி நபராகவும் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில்  8 பவுண் பெறுமதியுள்ள தங்க தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் திருட்டு போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ச்சியாக நகைகள் திருடப்பட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அம்பாறை - பெரியநீலாவணை பொது மக்களுக்கு பொலிஸாரின் அறிவித்தல் | Ampara Periyaneelavanai Police Advise People

அதிகமான முறைப்பாடுகள் பதிவு

எனவே, வீதி ஓரங்கள், பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சந்தேகத்திற்கிடமாக இரவு பகல் வேளைகளில் யாராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத்தருமாறு கேட்டுள்ளனர்.

பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் நகைகள் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் துரித நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.