அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

Ampara Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 11, 2025 04:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம் சுமார் 02 இலட்சத்து 65 ஆயிரத்து736 மெற்றிக்தொன் நெல் அறுவடையாக எதிர்பார்க்கப்படுவதுடன் இது தேசிய நெல் உற்பத்தியில் இம்மாவட்டம் 12.7 வீத பங்களிப்பை செய்து வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிரடியான முடிவை எடுத்துள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்..! வெளியான தகவல்

அதிரடியான முடிவை எடுத்துள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்..! வெளியான தகவல்

நெல் அறுவடை

நாட்டின் நெல் உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டமும் முதன்மை வகிக்கின்ற நிலையில், இம்முறை மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்தியில் கணிசமானவை “சிவப்பு நாடு” இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.

Ampara red rice harvest Sri Lanka 2025

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உலர வைக்காத நெல் ஒரு கிலோ 100 ரூபா முதல் 105 ரூபா வரை தனியார் நெல் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்!

போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்!

அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம்

அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery