அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை - காரைதீவு சந்திக்கு அருகாமையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உப தலைவர் சதாசிவம் யாதுராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்ட ஏனைய வேலையற்ற பட்டதாரிகள், தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இதுவரையிலும் வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை மற்றும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








