48 வது தேசிய விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டம் சாதனை
விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 48வது தேசிய விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் மதீனா அணியானது இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
இது மாவட்டத்திற்கு வரலாற்று சாதனையாக அமைந்துள்ளதுடன் 48 வருடங்களுக்குப் பிறகு இதுவே முதல் தடவையாக வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.
வெண்கலப் பதக்கம்
ஏற்கனவே
வெண்கலப் பதக்கத்தினை பெற்ற அணி இம்முறை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளிப்
பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.
இதில் வடமத்திய மாகாண அனுராதபுரம் அணியினை எதிர்த்து நிந்தவூர் மதீனா அணியினர் மோதிக் கொண்டனர்.
இந்த நிக்ழ்வில் அம்பாறை மாவட்ட அணி சார்பாக நிந்தவூர் மதினா அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கபடி அணியில் தேசிய அணி தலைவர் அஸ்லம் ஷஜா உள்ளிட்ட முப்படைகளின் வீரர்கள், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. இம்றுபஸ்கான் மற்றும் கபடி நடுவரும், பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான எஸ்.எம் இஸ்மத் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |