அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம்
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை -அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நிறுத்திவிட்டு அதில் ஏறி குறித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில், காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.