சூரியனை நெருங்கி உள்ள நாசா விண்கலம்

United States of America NASA World
By Fathima Jul 09, 2023 10:34 AM GMT
Fathima

Fathima

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் அனுப்பிய 'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்ற விண்கலம் 16 முறையாக சூரியனை நெருங்கிச் சென்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

எனினும் விண்கலத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை. தற்போது மேலும் நெருங்கிச் செல்ல தயாராகி வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த ஜூன் 27 ஆம் திகதி 5.3 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரியனை நெருங்கி உள்ள நாசா விண்கலம் | American Nasa Reached Sun

சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை நெருங்கிச் சென்றுள்ள விண்கலம்

அடுத்த மாதம் 21 ஆம் திகதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு 'பார்க்கர்' விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்லவுள்ளது.

நாசா சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் 'பார்க்கர்' என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி விண்ணில் ஏவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சினை இன்றி செயல்பட்டால் சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயல்பாடுகளை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW