மஹர பள்ளிவாசலை அமைக்க அரசு மாற்று காணி வழங்க வேண்டும்: சபையில் இம்ரான் எம்.பி. வேண்டுகோள்
புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று (07.07.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்த பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல்
நூற்றாண்டு கால வரலாறு கொண்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க காணி துண்டொன்றை பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.
இது விடயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் எம்.பி. சபையில் வலியுறுத்தினார்.