நாட்டில் இனவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும்: நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Nalinda Jayatissa
By Laksi Dec 03, 2024 01:16 PM GMT
Laksi

Laksi

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாறுவதற்கு இடமளிக்காமல் இந்த தருணத்தில் அது முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய சட்டங்கள்

இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் சில இடங்களில் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் இனவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும்: நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு | Allow Us To Use Racism Nalintha Jayatissa

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான, குடிமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தயார்.

ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றும், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற தயாராக இருப்பவர்களுக்கு இடமளிப்பதில்லை என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட்

மத்ரஸா மாணவர்களின் இறப்பு குறித்து நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட ரிஷாட்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW