ஒரு சாரருக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதி: எழுந்துள்ள குற்றச்சாட்டு
சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 20 முதல் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் எந்த வாய்ப்பையும் வழங்கியிருக்கவில்லை.
புதிய முகவர்கள்
இவற்றிற்கிடையில், 1,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த அமைச்சரவை பத்திரத்தில் புதிய முகவர்களுக்கு மாத்திரமே 1,000 வாகனங்கள், அதாவது பேருந்துகள் மற்றும் வான்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அமைச்சரவை பத்திரத்தில் ஏனைய இறக்குமதியாளர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்னளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |