நாட்டிலுள்ளள மதுபானசாலைகளுக்கு .பூட்டு: கலால் திணைக்களம் அறிவிப்பு
Sri Lankan Peoples
Tourism
Excise Department of Sri Lanka
By Fathima
நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் பூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மது ஒழிப்பு தினம்
நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மது விநியோக நிலையங்கள் யாவும், அக்டோபர் 3 ஆம் திகதி மூடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதனையொட்டியே மதுபானசாலைகள் யாவும் மூடப்படுகின்றது என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.