தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுக்கு அலிசப்ரி ரஹீம் எம்.பி நிதியுதவி
தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுக்காக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது சொந்த நிதியிலிருந்து ஏழு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விழா தொடர்பான கூட்டத்தில் மேற்படி உதவித்தொகைக்கான காசோலையை நாடாளுமன்ற உறுப்பினர் , புத்தளம் மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளார்.
தேசிய வெசாக் பண்டிகை இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பணம் திரட்டுவதில் பாரிய சிக்கல்
இதற்கான சகல முன் ஏற்பாடுகளும் புத்தளம் மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,சமகாலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அரச நிறுவனங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் மேற்படி வெசக் பண்டிகைக்கான செலவுகளுக்கு பணம் திரட்டுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோகியுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எஸ்.எச்.எம்.பி.ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் தெரிவித்த வேண்டுகோளின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சகல இன மக்களின் சகவாழ்வுக்காக மேற்படி பணத்தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.