கச்சத்தீவு குறித்து வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்

Ali Sabry Sri Lanka India
By Aadhithya Jun 30, 2024 01:06 PM GMT
Aadhithya

Aadhithya

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை (Sri Lanka) மற்றும் இந்தியாவிற்கு (India) இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) குறிப்பிட்டுள்ளார்.

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய அதிகாரி

இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை இதனடிப்படையில், ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை என இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கச்சத்தீவு குறித்து வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல் | Ali Sabry About Kachchathivu Treaty

இந்தநிலையில், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லையென அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்