இலங்கை மாலைதீவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அலி சப்ரியின் கருத்து

Ali Sabry Sri Lanka Maldives
By Madheeha_Naz Jun 08, 2023 07:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்

இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07.06.2023) கைச்சாத்திடப்படப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல்

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை மாலைதீவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அலி சப்ரியின் கருத்து | Ali Sabri Regarding Sri Lanka Maldives Mous

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 4ஆவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமர்வில் மாலைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீட் கலந்து கொண்டுள்ளார்.