அலி சப்ரி ரஹீமின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடர வேண்டும்: சபாநாயகர்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியாததால், சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் வழக்கு தொடர வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்.பி. ரஹீம் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைப்பேசிகளை கடத்திச் வந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் துபாயில் இருந்து இலங்கைக்கு 70 மில்லியன் ரூபாய் சுங்க சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சட்ட நடவடிக்கை
(23.05.2023) அன்று ‘விஐபி சேனல்’ மூலம் வெளியேறிய ரஹீமின் வசம் இருந்த மொத்தம் 3.5 கிலோகிராம் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் மொபைல் போன்களை BIA இல் பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குறித்த எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என ஆராய்ந்த போது, இது தொடர்பில் நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என சபா நாயகர் மஹிந்த யாபா அபேவர்தன விளக்கமளித்தார்.