இலங்கை சட்டங்களை மதிக்காத நாடாக அங்கீகரிக்கப்படும்! மார்ச் 12 இயக்கம் எச்சரிக்கை
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அலி சப்ரி ரஹீம், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில்,“மார்ச் 12 இயக்கம்” இதனை தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் இயக்கம் கவலை தெரிவித்ததுடன், சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரைப் பாதுகாக்கும் நகர்வுகளைக் கண்டித்து, மார்ச் 12 இயக்கம், நாடாளுமன்றமும் ஜனாதிபதியும் செயலற்ற தன்மையால் இலங்கை தனது சட்டங்களை மதிக்காத நாடாக அங்கீகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.