அலி சப்ரி விவகாரம் ஒரு அரசியல் விளையாட்டு-; சரத் பொன்சேகா

Sri Lanka Cabinet Sri Lankan Peoples President of Sri lanka
By Fathima May 26, 2023 09:20 AM GMT
Fathima

Fathima

அலி சப்ரி வாக்களித்தது அரசியல் விளையாட்டு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வாக்களித்தது அரசியல் விளையாட்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல் மாசல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த அலி சப்ரி ரஹீம்

அரசாங்கம் தன்னைக் காப்பாற்ற தவறியதால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார், எனவே அவரை அவ்வாறு வாக்களிக்கச் செய்தமை ஒரு அரசியல் தந்திரமாகவே பாரக்க வேண்டும்.

போதகர் ஜெரோம் வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிட்ட சம்பவமும் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்பட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் (அரகலய) பற்றி பயப்படுவது எனக்குத் தெரியும்.

அதனால் தான் துஸ்பிரயோகம் மற்றும் விபசார விடுதி நடாத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரகலய உறுப்பினர்கள் மீது பழி போடுகிறார்கள், என மேலும் பீல் மாசல் சரத் பொன்சேகா  தெரிவித்திருந்தார். 

அலி சப்ரி விவகாரம் ஒரு அரசியல் விளையாட்டு-; சரத் பொன்சேகா | Ali Sabri Raheem