அலி சப்ரி - நிர்மலா சீதாராமன் சியோலில் சந்திப்பு!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்றைய தினம் (03.05.2023) தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாநாட்டின்போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கான பொருளாதார பங்காளித்துவம் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளார்.
56ஆவது வருடாந்த கூட்டம்
மேலும், இலங்கையின் மிகவும் நெருக்கடியான தருணத்தில் -சவாலான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்கும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து இந்தியா வழங்கிவரும் ஆதரவிற்கும் இந்திய நிதியமைச்சருக்கு அலிசப்ரி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் 56ஆவது வருடாந்த கூட்டம் தென் கொரியாவில் நடைபெறுகின்றது.
இந்த ஆளுநர்கள் மாநாடு, 2023 மே 02 முதல் 05 வரை சியோலில் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வு, நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 3,000-4,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு உயர்மட்ட நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |