அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை
Colombo
Ali Sabry
Senthil Thondaman
By Fathima
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது கொழும்பில் இன்று (06.06.2023) நடைபெற்றுள்ளது.
ஆளுநரின் கோரிக்கை
இந்த கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலே ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதன்போது ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் வழங்கியுள்ளார்.