ஈரான் உயரதிகாரியின் மகளின் திருமண ஆடையால் கிளம்பிய புதிய சர்ச்சை
முஸ்லிம் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரான் நாட்டில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய பாதுகாப்பு ஆலோசகரின் மகள், ஹிஜாப் அணியாமல் மேற்கத்திய பாணி உடையில் திருமணம் செய்திருக்கும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தங்களின் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஈரானிலுள்ள அனைத்து பெண்களும் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனை ஈரான் கடுமையாக பின்பற்றி வருகிறது.
அரசுக்கு எதிரான கண்டனம்
அத்துடன், கடந்த 2022ம் ஆண்டு, தலைமுடி முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக, மாஷா அமினி என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஆடை தொடர்பான போராட்டங்கள் நடந்தன. ஆனால், கட்டுப்பாடுகளை குறைத்துக்கொள்ள அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகள் திருமணத்தில் அவரின் மகள் உட்பட திருமணத்தில் கலந்துகொண்ட மற்றைய பெண்களும் ஹிஜாப் அணியாமல் இருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அரசுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |