இலங்கையில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Rakshana MA
a month ago

Rakshana MA
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மதுவரி 14 வீதமாக அதிகரிக்கப்பட்டமையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 28.2 மில்லியன் லீட்டராக காணப்பட்ட மதுபான நுகர்வானது 2024 ஆம் ஆண்டில் 27.2 மில்லியன் லீட்டராக வீழ்ச்சியடைந்துள்ளது.
குறைவடைந்துள்ள மதுபான நுகர்வு
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 167.7 பில்லியின் ரூபாய் மதுவரி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீத அதிகரிப்பு என்பதுடன், கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மதுவரி வருமானம் 138.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |