ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலாளர் திரவியராஜ் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆராயப்பட்ட விடயங்கள்
குறித்த கூட்டத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என ஆராயப்பட்டதுடன், இப்பிரதேச செயலக பிரிவிலுள்ள குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, யானை வேலி அமைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நாயக்க மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




