முதன் முறையாக தேசிய ரீதியில் அல்-குர்ஆன் மனனப் போட்டி

Colombo Sri Lanka WhatsApp Sri Lankan Peoples Sri Lankan Schools
By Fathima Jun 26, 2023 07:58 AM GMT
Fathima

Fathima

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் அனுசரணையில் முதன் முறையாக தேசிய ரீதியில் அல்-குர்ஆன் மனனப் போட்டியொன்றை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியினை எதிர்வரும் ஜுலை15ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை மையப்படுத்தி இடம்பெறும்.

மேற்படி போட்டி நடைபெறும் காலம் மிகக் குறுகியது என்பதனால் திணைக்கள கள உத்தியோகத்தர்களின் ஊடாக விண்ணப்பம் தொடர்பான விடயங்கள் 'வட்ஸ்அப்' மூலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.