ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய மைதான பார்வையாளர் அரங்கு புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Ampara Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Jul 24, 2024 09:14 PM GMT
Harrish

Harrish

அம்பாறை - அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கை 03 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று(24.07.2024) இடம்பெற்றுள்ளது.

பார்வையாளர் அரங்கின் புனரமைப்பு பணி

குறித்த புனரமைக்கும் பணிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பமாகியுள்ளது.

கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய அதிபர் யூ.கே. அப்துல் ரஹீம் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம். முகம்மட் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதான பார்வையாளர் அரங்கின் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய மைதான பார்வையாளர் அரங்கு புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் | Al Hamra School Ground Auditorium Renovation

இந்நிகழ்வில் சஹ்வா அரபு கல்லூரி அதிபர் ஐ.எல். ஜலால்தீன் (ஸஹ்வி), ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஒலுவில் வைத்தியசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு தலைவர் எம்.எஸ்.எம். நிஹால் உட்பட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இப்பாடசாலைக்கு தேவைக்கான தளபாட கொள்வனவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery