க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination
By Rakshana MA Aug 12, 2025 05:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு (GCE A/L) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (12) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், உயர்தர பரீட்சைகள் நவம்பர் 11 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்தியா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’

திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’

 முக்கிய அறிவிப்பு

பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Al 2025 Application Deadline

இதன்படி, இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கந்தளாயில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

கந்தளாயில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW