கல்முனையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு
குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் முதியோர் இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியோர் இல்லமானது, நேற்று(05) அஜா(AJAA) இல்லம் எனும் பெயரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம்முதியோர் இல்லத் திறப்பு விழா இல்லத் தலைவர் சோதினி அருள்ராஜ் (ஜுடி) தலைமையில் நடைபெற்றுள்ளது.
முதியோர் இல்லம்
இந்த இல்லத்தில் குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்று தனிமையான வயோதிப பெண்களுக்கு முன்னுரிமை அளித்து இடம் கொடுக்கப்படவுள்ளது.
பின்னர் ஆண்கள் சிறுவர்கள் என இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கே இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் வெளியிலிருந்து ஆலோசனை தேவைப்படுவோருக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டுள்ளதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










