பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் நோக்கி வான்வழித் தாக்குதல் : 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானின்(Afghanistan) பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான்(Pakistan) நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லமன் உட்பட ஏழு கிராமங்கள் நேற்றிரவு (24) இந்தத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உளவு விமான தாக்குதல்
இந்த தொடர் தாக்குதல்கள் பாகிஸ்தான் விமானப்படையின் உளவு விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்களால் பர்மாலின் முர்க் பஜார் கிராமம் கடுமையான அழிவை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் இந்த வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்களுக்குப் பெரும் சேதம் மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பர்மால், பாக்டிகா மீதான வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக தலிபான்களின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |