கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை ஆரம்பம்

SriLankan Airlines Nimal Siripala De Silva Senthil Thondaman Eastern Province
By sowmiya May 27, 2023 08:19 AM GMT
sowmiya

sowmiya

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தி்ட்டம் குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமையால் இத்திட்டத்தினை அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு சேர்த்துள்ளார்.

இதனையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, Cinnamon Air,Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் cinnamon Air தனது விமானச் சேவையை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது.

மேலும், அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை ஆரம்பம் | Air Service To Start In Eastern Province Soon