காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Air Pollution
By Rakshana MA May 05, 2025 08:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்தது.

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

காற்றின் தரத்தில் மாற்றம்

அதே நேரத்தில் குருணாகல், கண்டி, காலி, புத்தளம், பதுளை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகியவற்றில் மிதமான நிலை காணப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச்சுட்டெண் 34 மற்றும் 94 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Air Quality In Condition Sri Lanka

அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையிலும், கண்டி, காலி, புத்தளம், பதுளை, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகியவற்றில் மிதமான நிலையிலும் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW