காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Air Pollution
By Rukshy Jan 30, 2025 03:22 AM GMT

நாட்டின் பல நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று (30) முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு சஜித் இரங்கல்

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு சஜித் இரங்கல்

தற்போது நிலவும் வானிலை

இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் காற்றின் தரம் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு | Air Quality Advisory Issue Sri Lanka Many Areas

குறித்த  நாடுகளில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதாகவும், தற்போது நிலவும் வானிலையுடன் அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் புகழுடல்

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் புகழுடல்