மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் புகழுடல்
                                    
                    Jaffna
                
                                                
                    TNA
                
                                                
                    Mavai Senathirajah
                
                        
        
            
                
                By Dharu
            
            
                
                
            
        
    இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
1942 ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் இன்று இரவு மரணமடைந்துள்ளார்.
இதன்படி மாவை சேனாதிராஜாவின் புகழுடலை குடும்பத்தாரின் அனுமதிக்கு அமைய நாடாளுமன்ற சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரது புகழுடல் மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சி. சிறீதரன் எம். பி அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
    