நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மேலும் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனால், மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளிமாசானது இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக நேற்றைய தினம் (16.01.2024) இலங்கையின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தூசித் துகள்களின் அளவு
தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, நேற்று காலை 8.30 மணியளவில், குருநாகல் நகரத்தில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) மிக உயர்ந்த பெறுமதியைக் காட்டியுள்ளது.
இந்த நிலைமையானது சுவாசக்கோளாறு உள்ளவர்கள், சிறார்கள் மற்றும் வயதானவர்கள் உடையவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.