ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

India Flight Air India
By Fathima Dec 18, 2025 06:15 AM GMT
Fathima

Fathima

பனி மூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

மோசமான வானிலை

பனி மூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Air India Travel Advisory Warns Possible Flight

பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

விமான நடவடிக்கை

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த சில நாட்களில், மோசமான தெரிவுநிலையை ஏற்படுத்தும் அடர்த்தியான மூடுபனி நிலைமைகள், டெல்லியில் உள்ள எங்கள் முதன்மை மையத்திலும், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களிலும் விமான நடவடிக்கைகளை பாதிக்கலாம்.

எங்கள் நெட்வொர்க்கில் உள்ள வேறு சில நகரங்களிலும் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பயணிகள் விமானப் பயண நிலையை சரிபார்க்கும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் விமானப் பயணங்களை மாற்றலாம் அல்லது அபராதம் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெறலாம் என பதிவிட்டுள்ளது.