திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்!

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Nov 28, 2025 08:54 AM GMT
Fathima

Fathima

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் டிட்வா புயல் காரணமாகவும் முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) தம்பலகாமம் வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது.

குறித்த வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

விவசாய நிலங்கள்

முள்ளிப்பொத்தானை,ஜாமியா நகர்,ஈச்சநகர்,பத்தினிபுரம், புதுக்குடியிருப்பு,கோயிலடி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது.

திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்! | Agricultural Lands Heavily Affected By Weather

தம்பலகாமம்,கோயிலடி பகுதியில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சேர்ந்த 90 பேர்கள் தி/ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத் தங்கல் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11 பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் 124 கிராம சேவகர் பிரிவில் இருந்து 5433 குடும்பங்களை சேர்ந்த 16063 நபர்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGallery