கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் இடையே ஒப்பந்தம்

Ministry of Education Microsoft A D Susil Premajayantha Ranil Wickremesinghe Education
By Thulsi Mar 20, 2024 10:38 AM GMT
Thulsi

Thulsi

தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI)  விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் கைசாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டுள்ளது

இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழு

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் இடையே ஒப்பந்தம் | Agreement Between Ministry Of Education Microsoft

அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.