விவசாய நவீனமயமாக்கலுக்கான செயலணியை உருவாக்க ஜனாதிபதி திட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka
By Dhayani Aug 12, 2023 09:54 AM GMT
Dhayani

Dhayani

பல அமைச்சுக்களை இணைத்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை உள்ளடக்கி விவசாய நவீனமயமாக்கலுக்கான செயலணியொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு விவசாய, பெருந்தோட்ட மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்பது மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் இந்த செயலணி மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW