சிறுபான்மையினரை அடக்கும் இந்தியா : அமெரிக்காவின் எதிர்ப்பு குரல்

United States of America India World
By Raghav Jun 27, 2024 07:32 PM GMT
Raghav

Raghav

இந்தியாவில் (India) சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்க (United States) வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken ) தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

தனித்தனி சட்டங்கள்

சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

பொது சிவில் சட்டம் மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வலியுறுத்தி வருகிறார்.

சிறுபான்மையினரை அடக்கும் இந்தியா : அமெரிக்காவின் எதிர்ப்பு குரல் | Against United States For India

முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசு அதிகாரிகள் எதிர்த்தனர்.

இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஆண்டனி பிளிங்கன் தெரிவிக்கையில், இந்தியாவில், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது.

இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது” என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW