பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிக்கு இடையிலான நட்பு ரீதியான கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டி நேற்றைய தினம் (24.03.2023) இடம்பெற்றிருந்த நிலையில் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது வரலாற்று வெற்றியினை பதிவு செய்திருந்தது.
பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாம் உட்பட ஐந்து முன்வரிசை வீரர்கள் தற்காலிக ஓய்வுகாலத்தில் உள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை பாக்கிஸ்தான் அணி தேர்ந்தெடுத்தது.
சைம் அயூப், தயாப் தாஹிர், இஹ்சானுல்லா மற்றும் ஜமான் கான் ஆகியோருக்கு பாகிஸ்தான் டி20 அறிமுகங்களை வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எவராலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

வலிமையான தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் இல்லாத நிலையில், மாற்று வீரர்களான அயூப் மற்றும் முகமது ஹாரிஸ் ஆகியோர் அபாரமாக துடுப்பெடுத்தாட முயலும் போது விக்கெட்டுக்களை இழந்தனர்.
மேலும் பாகிஸ்தானில் அறிமுகமான நால்வரில் ஒருவரான தயப் தாஹிர், ரஷித் கானிடம் பிடி கொடுத்தார். அறிமுக ஆட்டத்தில் அசம் கானும் டக் அவுட்டாக, எட்டாவது ஓவரில் பாகிஸ்தான் 41-5 என்று சுருண்டது.
வழக்கத்திற்கு மாறான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 2-9 மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி 2-13 என விக்கட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 10வது ஓவரில் 45-4 என வீழ்ச்சியடைந்த நிலையில் 98-4 ரன்களை எடுத்து 2 ஓவர்கள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறந்த ஆட்டநாயகனாக மொஹமட் நபி தெரிவு செய்யப்பட்டார். (பந்து வீச்சில் 2-12-2) துடுப்பாட்டத்தில் 38 பந்துகளுக்கு 38 ஆட்டங்கள்.
