கடும் வெப்பத்தால் 7000இற்கும் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2,278 குடும்பங்களைச் சேர்ந்த 7,194 பேர் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பத்தால் பாதிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,885 குடும்பங்களைச் சேர்ந்த 5,776 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,418 பேரும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபெல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைளத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பௌசர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |